CINEMA
அஜித் சொன்ன அந்த விஷயம்…. “என் வளர்ச்சியை பார்த்து” SK பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிற நிலையில் படத்தின் ஆடியோ லாங்ச் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி ஒன்றில் அஜித் சாரை சந்தித்தேன். “Welcome to big league”ன்னு சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலன்னு சொன்னேன். “உங்கள் வளர்ச்சியைக் கண்டு பலர் Insecured-ஆ இருக்காங்கன்னா, You are into big league”னு சொன்னார் என்று கூறியுள்ளார்.