CINEMA
“அயோத்தி” படத்தால் எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்திருக்கு.. நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி..!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் அயோத்தி. இந்த படத்தை இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், பிரீத்தி அசஸ்ராணி, யாஷ்பால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வசிக்கும் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வருவார்கள். அப்போது விபத்து நடந்து அதில் ஒருவர் உயிரிழந்து விடுவார். உயிரிழந்தவரின் உடலை விமானம் மூலமாக சசிகுமார் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவி செய்வார்.
இதுதான் படத்தின் கதை. இந்த நிலையில் நடிகர் சாசிக்குமார் டூரிஸ்ட் பேமிலி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது பேசியுள்ளார். அதில், அயோத்தி படத்தால் விமானத்தில் உடலை கொண்டு செல்வதற்கு தேவையான நடைமுறைகள் எளிமையாக மாறி இருக்கிறது. அதற்காக ஒரு லட்சம் வரை மானியமும் கொடுக்கிறார்கள். இதனால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக ஒருவர் கூறினார். எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்