CINEMA
என்னுடைய படத்தில் கிளாமர் இருக்கும்… ஆனா அது மட்டும் இருக்காது… சுந்தர் சி சொன்ன விஷயம்..!!

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கேங்ஸ்டர். இதற்கு சத்யா.சி இசையமைக்கிறார். இதில் கேத்தரின் தெரசா ஹீரோயினாக நடிக்கிறார். வடிவேலு இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர்.சி, என்னுடைய படத்தினை பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் தான் பார்க்கிறார்கள். அதனால் தான் என்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை விரும்புவது கிடையாது. என்னுடைய படத்தில் கிளாமர் காட்சிகள் இருக்கும். ஆனால் ஆபாசம் இருக்காது. நான் கதை எழுதும் போது இதை தவிர்த்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.