ஓடும் ரயிலில் நடந்த ஒரு சோகச் சம்பவம்! இப்படியான குடும்பங்களின் வாழ்வு முன்னேறுவது எப்போது? - cinefeeds
Connect with us

TRENDING

ஓடும் ரயிலில் நடந்த ஒரு சோகச் சம்பவம்! இப்படியான குடும்பங்களின் வாழ்வு முன்னேறுவது எப்போது?

Published

on

ரயில் பயணம் தரும் சுகம் அலாதியானது. முன்னரே டிக்கெட் ரிசர்வேசன் செய்து கொண்டு சரியான நேரத்தில் ஸ்டேசனுக்கு வந்து, பிளாட்பாரத்தில் ரயில் வந்ததும் ஏறி தூங்கிவிடுவது சுகம்.

அதுவே திடீர் அவசர பயணம் என்றால் அதுவே பெரும் குடைச்சலாகிவிடும். அதிலும் குடும்பத்தோடு செல்லும் அப்படியான அவசர பயணம் அவஸ்தையானது. அதிலும் சிலர் அன்ரிசர்வ்ட் பெட்டி என நினைத்து ரிசர்வேசன் பெட்டியில் ஏறிகொண்டு விழிபிதுங்குவதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம் தான் இது…

Advertisement

கடந்த மாதம் 26ம் தேதி ஒரு தம்பதி தன் குழந்தைகளுடன் அவசரத்துக்காக தவறுதலாக ரிசர்வேசன் கம்பார்ட்மெண்டில் ஏறிவிட்டனர். அப்போது அங்கு இருந்த ரயில் டிக்கெட் பரிசோதகர், அந்த தம்பதியிடம் அடுத்த ஸ்டேசனில் ரயில் நிக்கும் போது, பின்னால் அன் ரிசர்வேசன் பெட்டிக்கு போங்க. இல்லாவிட்டால் 800 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என சொல்லியிருக்கிறார். இதைக்கேட்ட அந்த தம்பதியினர் எங்கள் உடன் குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்க இங்க இருந்து ஓடி, அவுங்களையும் கூட்டிட்டு கடைசி பெட்டிக்கு போறதுக்கு உள்ள ரயிலே போயிடும். நீங்க 800 ரூபாய் அபராதம் கேட்குறீங்க. எங்ககிட்டயே 700 ரூபாய் தான் இருக்கு. என்று சொல்லி டிக்கெட் பரிசோதகரிடம் கெஞ்சி இருக்கிறார்கள்.

கடைசியில் டிடி ஆர் நானூறு ரூபாய் வாங்கிக் கொண்டு, ஒருவருக்கு மட்டும் பைன் போட்டு சீட் இல்லை. கீழ தான் உட்கார்ந்து வரணும்ன்னு சொல்லியிருக்கிறார். பணத்தை கொடுத்துவிட்டு கீழே உட்கார்ந்த இந்த குடும்பம் தங்களுக்குள் சில விசயங்களை பேசி இருக்கிறது. ‘’ஏதோ ஒரு சொந்தக்கார வீட்டுக்கு போற இந்த குடும்பம் அந்த ஸ்டேசன் போனதும், வீட்டுக்கு நடந்தே போயிடலாம். குழந்தைக்கு 100 ரூபாய்க்கு மட்டும் கிப்ட் வாங்கிக்கலாம். வரும்போது அதே மாதிரி நடந்துவந்து பேசஞ்சர் டிரைய்ன்ல ஏறிக்கலாம்ன்னு கணக்கு போட்டு இருக்காங்க..”

Advertisement

இப்படி பேசி முடித்த அந்த பெண் தன் இரு குழந்தைகளோடே கதவு பக்கத்தில் படுத்து தூங்கியிருக்காங்க. இதை பார்த்துக்கொண்டே அவரது கணவர் ஒரு ஓரமாக கண்கலங்கியபடியே இருந்தார்.

இதுகுறித்து ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தன் பேஸ்புக்கில் போட, அதைப் படித்து உருகி வருகின்றனர் நெட்டிசன்கள். என்று மாறுமோ இந்த வறுமையின் ரேகைகள்?

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in