காதல் திருமணம்.! முதன் முதலில் பாடிய பாடல் எது? S.P.B.-யின் கின்னஸ் சாதனை பற்றி தெரியுமா உங்களுக்கு..?? - cinefeeds
Connect with us

TRENDING

காதல் திருமணம்.! முதன் முதலில் பாடிய பாடல் எது? S.P.B.-யின் கின்னஸ் சாதனை பற்றி தெரியுமா உங்களுக்கு..??

Published

on

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியன் இன்று காலமானார். அவருடைய பிறப்பு மற்றும் திரைத்துறைக்குள் நுழைந்தது பற்றிய பல சுவாரசிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

எஸ்.பி.சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார்.

தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று,இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார் பாலசுப்பிரமணியம். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். தந்தையின் பொறியாளர் கனவு இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது,

Advertisement

ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோதன் மகன் பொறியாளன் ஆகவேண்டும் என்றிருந்தது. கல்லூரியில்படிக்கும் போதே பல இசைபோட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். இசைப்போட்டியில் முதல் பரிசு 1964 ஆம்ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னைமையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல்பரிசு பெற்றார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

Advertisement

எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.

தமிழில் பாடிய முதல் பாடல் இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம்வெளியிடப்படவில்லை. அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார்.

Advertisement

ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்தஅடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல்வெளிவந்தது. 1966ம் ஆண்டுமுதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார், திரைப்படபாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசைஅமைப்பாளர்,  திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக்குரல் தருபவர் எனப் பன்முகஅடையாளம் கொண்டவர்.

குவிந்த விருதுகள்
இந்தியஅரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீவிருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன்விருதும் வழங்கியது. 2015ஆம்ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்குஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மதங்களைகடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளதால், 2015ஆம்ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்”விருது பெற்றுள்ளார். 2016 ஆம்ஆண்டு 47வது இந்திய சர்வதேசதிரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

Advertisement

காதல் திருமணம்
காதலித்துதிருமணம் செய்து கொண்ட பாலசுப்பிரமணியத்தின் மனைவி பெயர் சாவித்ரி, இவருடைய மகள்பல்லவி மற்றும் மகன் எஸ்.பி. பி. சரண். தென்னிந்தியமொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில்நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகளை பற்றி விரிவாக அறிய கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in