CINEMA
‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு
ஷங்கர் இயக்கியுள்ள முதல் நேரடி தெலுங்கு படமான ‘கேம் சேஞ்சர்’ வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஊழலுக்கு எதிராக போராடும் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ராம் சரண். அவருடன் கியாரா அத்வானி. அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஷங்கருடன் முதல்முறையாக இணைந்துள்ளார் இசையமைப்பாளர் தமன்.
இப்படம் தெலுங்கில் மட்டுமின்றி, தமிழ் மற்றும் ஹிந்தியிலும் வெளியாகிறது. ஆனால், இப்படம் கன்னடாவில் வெளியாவதாக தற்போது வரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதன்காரணமாக இப்படம் கர்நாடகா முழுவதும் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியிலேயே வெளியாகிறது. ஒரு பெரிய நடிகர் மற்றும் இயக்குநரின் படம் தங்கள் மாநில மொழியில் வெளியாகாததிற்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும், கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை அங்கு சில கட்சியினர் ஸ்பிரே அடித்து அழித்து வருகின்றனர்.