CINEMA
டூ பீஸில் பயங்கர ஹாட்டாக போஸ் கொடுத்த லாரன்ஸ் பட நடிகை
அர்ஜுன் இயக்கி நடித்த ‘மதராஸி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வேதிகா. இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் தமிழிலே அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார்.
முதல் படத்திற்குப் பின் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தில் நடித்து தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயமானார். அதன்பின் சக்கரக்கட்டி, காளை, மலை மலை என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அதற்கு அடுத்து வெளியான பாலாவின் பரதேசி படம் அவரது நடிப்பிற்கு தீனிபோடும் விதமாக அமைந்தது.
அதன்பின் தமிழில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு இவரது நடிப்பில் தமிழில் வெளியான ‘பேட்ட ராப்’ படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இவரது ககைவசம் ‘கஜானா’ என்ற ஒரே தமிழ்ப்படம் மட்டுமே உள்ளது.
என்னதான் படங்களில் பிசியாக நடித்துவந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது தனது கவர்ச்சிப் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் குறிப்பாக சமீப காலமாக தனது டூ பீஸ் புகைப்படங்களை அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதையெல்லாம் பார்த்தா அவருக்கு 37 வயது என யாரும் நம்ப மாட்டார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.