CINEMA
“தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” GBU படத்தில் பிரியா வாரியாருக்கு பதிலாக… முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இந்த படம் உலக அளவில் வசூலில் பட்டைய கிளப்புகிறது. ரெட்ரோ பாடல்கள், அஜித்தின் ரெஃபரன்ஸ் என தரமான சம்பவம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ரெட்ரோ பாடல்கள் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியர் மற்றும் அர்ஜுன் தாஸ் கலக்கல் நடனம் ஆடி இருந்தார்கள்.
இதன் பிறகுதான் எந்த பக்கம் திரும்பினாலும் இந்த பாடல் தான் சமூக வலைதளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மூலமாக பிரியா வாரியருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது பிரியா வாரியர் கிடையாதாம். சென்சேஷனல் நடிகை ஸ்ரீ லீலா தானாம். தென்னிந்திய சினிமாவில் நடனத்தில் கலக்கி கொண்டிருக்கும் ஸ்ரீலிலா தான் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்து பின் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதால் பிரியா வாரிய நடிகர் கமிட்டி ஆகி உள்ளார்.