CINEMA
நான் அதற்காக அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன்… மத்தவங்க செஞ்சாலும் தப்பில்ல… நடிகை ரகுல் பிரீத் சிங் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ,இந்தியன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அஜய் தேவ்கான் மற்றும் ஆர் மாதவனோடு இணைந்து பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,” நான் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தது கிடையாது.
எனக்கு அதற்கான அவசியமும் கிடையாது. ஏனென்றால் கடவுள் எனக்கு அழகிய முகத்தை கொடுத்துள்ளார். அதேபோல யாராவது அழகாக காட்சி அளிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.