CINEMA
பட்டையை கிளப்பும் “சச்சின்” படம்… நடிகை ஜெனிலியா என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா..? வைரல் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் முழுநேர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கு சென்ற காரணத்தினால் இந்த படம்தான் கடைசி என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இதற்கிடையில் கலந்து சில வருடங்களாகவே ரீ-ரிலீஸ் கலாச்சாரம் தமிழக சினிமாவில் பரவி இருக்கிறது.
தளபதி ரசிகர்களுக்கு நன்றி கூறும் @geneliad
Thanks to our dearest Shalinii
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP #Vadivelu @iamsanthanam @bipsluvurself #ThotaTharani #VTVijayan #FEFSIVijayan @idiamondbabu @RIAZtheboss @APIfilms @dmycreationoffl @Ayngaran_offl… pic.twitter.com/oP8cse0pvv
— Kalaippuli S Thanu (@theVcreations) April 24, 2025
கில்லி, தளபதி, ஆளவந்தான் போன்ற படங்கள் ரீரிலிஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில் தற்போது விஜயின் சச்சின் படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. சென்ற வாரம் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம் கடந்த 18 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் உலகளவில் இதுவரை 15 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகை ஜெனிலியா வீடியோ ஒன்ரை வெளியிட்டுள்ளார்.