பிச்சைக்காரன் நாயகியின் காதல் கணவர் மற்றும் அழகான குழந்தையை பார்த்துருக்கீங்களா..? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிச்சைக்காரன் நாயகியின் காதல் கணவர் மற்றும் அழகான குழந்தையை பார்த்துருக்கீங்களா..? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..?

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி திரைபடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இவர்கள் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் பரிச்சயம் ஆகாத நிலையில் ஆளே அடையாளம் தெரியாமல் போய்விடுகின்றனர்.

அவர்கள் என்னதான் சிறப்பாக நடித்தாலும் பல புதுமுக நடிகைகளின் வரவின் காரணமாக இவர்கள் இயக்குனர்கள் மத்தியில் மறைக்கபடுவதோடு அவர்களது படங்களில் நடிக்கமுடியாத நிலைக்கு தள்ளப்டுகின்றனர். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை திரைப்படம் பிச்சைக்காரன்.

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் படம் பிச்சைக்காரன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா.

மேலும் இவர் திட்டம் போட்ட திருடுற கூட்டம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.இந்நிலையில் சாட்னா கடந்த 2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தின் விநியோகிஸ்தர் கார்த்திக் என்பவரை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களது திருமணத்திற்கு சாட்னா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது காலம் கடந்தநிலையில் அந்தப் புகார் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் சாட்னா கார்த்திக் தம்பதியினர் தங்களது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in