பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகை விஜி என்ன செய்கிறார் பாருங்கள்! இவருமா இங்க – ரைட்டு - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகை விஜி என்ன செய்கிறார் பாருங்கள்! இவருமா இங்க – ரைட்டு

Published

on

விஜயலட்சுமி ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில் தோன்றினார். பின்னர், அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு நடிகையாகவும் மாறினார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 படத்தில் கதாநாயகியாகியாக அறிமுகமானார் விஜயலட்சுமி. பின்னர் இவர் அஞ்சதே, கற்றது களவு, பிரியாணி படங்களில் நடித்திருந்தார். விஜயலட்சுமி அவரது நண்பர் வெங்கட் பிரபுவை அணுகுவதற்கு முன், ஸ்டார் விஜய் சேனலில் “ஹலோ தமிழா” நிகழ்ச்சியை தொகுத்து பொழுதுபோக்கு துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் விஜயலட்சுமி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சீரியலில் நடித்து வந்தார். மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.  அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் நடிகை விஜய லட்சுமி தற்போது யூடுயூப் சானல் ஒன்றை துவக்கியுள்ளாராம். இதற்கு இட்ஸ்விஜி என்றும் பெயர் வைத்திருக்கிறாராம். இதில் முதல் வீடியோவில் கார் பற்றி பேசியுள்ளார். தொடர்ந்து பல விஷயங்களை பற்றி விஜி பேசப்போகிறாராம். வாழ்த்துக்கள் விஜி.

Advertisement
Continue Reading
Advertisement