Uncategorized
மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த முதலமைச்சர் !! உச்சக்கட்ட அதிர்ச்சியில் மக்கள் !! இந்தமுறை எத்தனை நாட்கள் தெரியுமா ??
சென்னை மதுரை கோவையில் முழுமையான ஊரடங்கு வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சேலத்தில் இன்று மதியம் முதல் திங்கள் கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது, சென்னை, மதுரை, கோவைக்கும் அறிவித்துள்ளது. முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரையில் ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 புதன் இரவு வரை முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்