VIDEOS
ரசம் சாதம் வேண்டாமாம்.. வருத்தகரித்தான் சாப்பிடுவாராம்… ஓனர் கேக்குற கேள்விக்கு க்யூட்டாக பதில் சொல்லும் பூனை குட்டி..!
கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் பூனையை வீட்டில், ஒரு குழந்தையைப் போல் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் பூனையும்! அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இங்கேயும் அப்படித்தான் ஒருவர் வீட்டில் பாசத்தோடு பூனையை வளர்க்கிறார். அந்த பூனையை அவர் குழந்தையைப் போல் வளர்க்க, பூனையும் அவரிடம் குழந்தை போல் வளர்கிறது. அவர் அந்த பூனையை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுகிறார். கூடவே, தயிர் சாதம் வேணுமா? காய்கறி சாதம் வேணுமா? என ஒவ்வொரு வெஜிட்டேரியன் ஐயிட்டமாகக் கேட்க பூனை செம சைலண்டாக இருக்கிறது. தொடர்ந்து அவர் சிக்கன் பிரியாணி வேணுமா?, மீன் வேணுமாஎனக் கேட்க அசைவ உணவுகளைக் கேட்கும் போதெல்லாம் சரி என்பது போல் குரல் எழுப்புகிறது.
கடைசியில், உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிடவா எனக் கேட்க,அதற்கும் சரி என்பதைப் போல குரல் எழுப்புகிறது பூனை. நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். இந்த பூனையின் திறமை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம்.