ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் “சச்சின்” படம்… மூன்றே நாளில் செய்த மாஸ் சம்பவம்..!! - cinefeeds
Connect with us

CINEMA

ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் “சச்சின்” படம்… மூன்றே நாளில் செய்த மாஸ் சம்பவம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் ஜனநாயகன்  படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் முழுநேர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கு சென்ற காரணத்தினால் இந்த படம்தான் கடைசி என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க  பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இதற்கிடையில் கலந்து சில வருடங்களாகவே ரீ-ரிலீஸ் கலாச்சாரம் தமிழக சினிமாவில் பரவி இருக்கிறது.

கில்லி, தளபதி,  ஆளவந்தான் போன்ற படங்கள் ரீரிலிஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில் தற்போது விஜயின் சச்சின் படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. சென்ற வாரம் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் ரீ ரிலீஸ் ஆகியுள்ள சச்சின் திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in