LATEST NEWS
விஜய் சேதுபதி சத்யா படத்தில் வரும் கமல்ஹாசன் போல் இருக்கும் புகைப்படங்கள் இதோ!

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி. ஆக்க்ஷன், ரொமான்ஸ் என ஒரு கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், தனது நடிப்பு பசிக்கு தீனி போடும் வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் மாஸ் பண்ணி வருகிறார் விஜய்சேதுபதி.
கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறு துணை வேடங்களில் நடித்து, பின்னணி நடிகராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அது என்ன மந்திரமோ தெரியலை, என்ன மாயமோ புரியல, கொரோனா வைரஸ் நம்ம ஊருக்கு வந்ததிலிருந்து விஜய் சேதுபதிக்கு நேரம் சரி இல்லை. இவர் முன்னாடி செய்த தவறு எல்லாம் இப்போது கிளறி வருகிறார்கள்.
அதற்குமுன் நிறைய குறும்படங்களில் நடித்திருந்தார். இவர் சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்று தற்போது பயங்கர வைரல் ஆகியுள்ளது. அந்த புகைப்படங்களில் சத்யா படத்தில் வரும் கமலஹாசனை போல் இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். இப்போது போது கூட சத்யா படத்தை ரீமேக் செய்தால், அந்த கமல்ஹாசனின் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி மட்டுமே உயிர் கொடுக்க முடியும் என்று கூறி வருகிறார்கள்.