CINEMA
‘விடாமுயற்சி’ எப்போதான் வரும்.. ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா நடித்துள்ள விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடா திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், சமீபத்தில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பின்னணி இசை சேர்க்க தாமதமானதால் படம் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதையடுத்து படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு தயாராக இருக்கும் அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியாவதற்கு குறைந்தது இரண்டு மாதத்திற்கு முன்பே ‘விடாமுயற்சி’ வெளியாகும் எனத் தெரிகிறது.