Uncategorized
வீட்டு வாசலில் நின்று பெண் செய்த கேவலமான செயல்… சிசிடிவி-யின் சிக்கிய அதிர்ச்சிக் காட்சி
ராஜஸ்தானில் பெண் ஒருவர் எச்சில் துப்பி, அதை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீடுகளுக்குள் வீசி எறிந்துவிட்டு சென்ற காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் தீவிர கண்காணிப்பும், ஊரடங்கின் மூலம் தடுப்பு முறைகளும் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண் ஒருவர் செய்துள்ள காரியம் சிசிடிவி காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கோடா மாவட்டம் வல்லவ்பாடி பகுதியில் பெண் ஒருவர் பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி அதனை வீடுகளுக்குள் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ள சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பின்னர் அப்பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பொலிஸார் அப்பெண் உட்பட வெவ்வேறு இடங்களில் இதே காரியத்தைச் செய்த இன்னும் 3 பெண்களை தேடி வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ