அசுர வேகம்..! எதிரே வந்த ஜேசிபி மீது மோதி பற்றி எரிந்த பேருந்து! 35 பேர் உடல் கருகி பலி! நெஞ்சை உறைய வைக்கும் விபத்து!

சவுதி அரேபியாவில் எதிரே வந்த வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதியதில் எரிந்து புனித யாத்திரை சென்ற 35 வெளிநாட்டு பயணிகள் பலியாகியுள்ளனர். சவுதியில் புனித தலமான மதினா மசூதி அருகே உள்ள ஹஜ்ரா சாலையில் எதிரே வந்த கனரக வாகனம் ஜேசிபி மீது புனித யாத்திரைக்கு வந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து மோதியதில் பற்றி எரிந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அரபு மற்றும் ஆசிய கண்டங்களை சேர்ந்த பயணிகளும் உள்ளனர் என போலீஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு சவுதியில் உள்ள புனிதத்தலமான மெக்கா மசூதி அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில், 4 பிரிட்டிஷ் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*