இறங்கி வருது தங்கம் விலை! இன்னும் கொஞ்சம் குறையுமா?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. நான்கே நாட்களில் 28 ஆயிரத்தையும் மிஞ்சியது. ஆகஸ்ட் 14ஆம் தேதி 29 ஆயிரத்தைக் கடந்தது, செப்டம்பர் 4ஆம் தேதி சவரனுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வுற்றது. பின் 29 ஆயிரத்துக்குக் கீழ் விலை குறைந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அக்டோபர் 7ஆம் தேதி மீண்டும் 30 ஆயிரத்தைத் தாண்டியது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3678/- ஆகவும், சவரனுக்கு ரூ. 29,424/- ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3843/0 ஆகவும், சவரனுக்கு ரூ. 30744/- ஆகவும் இருந்தது.

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3670/- ஆகவும், சவரனுக்கு ரூ. 29,360/- ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3835/- ஆகவும், சவரனுக்கு ரூ. 30680/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

16.10.2019 – 1 grm – Rs. 3835/-, 8 grm – 30,680/- ( 24 கேரட்)

16.10.2019 – 1 grm – Rs. 3670/-, 8 grm – 29,360/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.30 ஆகவும் கிலோ ரூ.49,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*