கல்கி பகவானும் ஃப்ராடு சாமியார்தானாம்? போதை மருந்து ஜோர்! ஆப்பிரிக்க முதலீடு! கலக்குறே சாமி!

கல்கி பகவானை தரிசனம் செய்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும், பாவங்கள் பனி போல் விலகும். செல்வம் பெருகும் என்று மக்கள் சொல்வதைக் கேட்டு ஏராளமான பக்தர்கள் நாடு முழுவதுமுள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சென்று வருகிறார்கள். கல்கி பகவான் என்பவரும் போலி சாமியார் என்பதை மக்களுக்கு உறுதியாகக் காட்டும் வகையில் சமீபத்திய வருமான வரித்துறை ரெய்டு நடந்து முடிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் தலைமையிடமாகக் கொண்டுள்ள கல்கி ஆசிரமத்தில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து புகார் எழுந்தது.

சென்னையில் நடந்த ரெய்டில் மட்டும் 20 கோடி ரூபாய் பணம் பிடிபட்டிருக்கிறது என்றும் ஆப்பிரிக்க நாட்டில் ஏராளமான முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தங்களைத் தேடிவரும் பக்தர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் போதை மருந்துகளைக் கொடுத்து மயக்கி பணம் பறிப்பதுதான் இந்த ஆசிரமத்தின் முக்கியமான ஸ்டைலாம். அதனால்தான் ஏராளமான வெளிநாட்டவர்கள் வந்து குவிகிறார்களாம். இத்தகைய சாமியார்களிடம்தான் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது என்று ஓடிப்போகும் மனிதர்களை என்னதான் செய்வது?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*