சினம் கொண்ட சிங்கத்தை நேருக்கு நேராக எதிர்கொண்ட இளைஞர்..! பிறகு அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் பரபர சம்பவம்!

வாலிபர் ஒருவர் டெல்லியில் அமைந்துள்ள சரணாலயம் ஒன்றில் சிங்கத்தை அடைத்து வைத்திருந்த இடத்தில் அத்துமீறி உள்ளே குதித்துள்ளார். டெல்லியில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தினம்தோறும் பல நூற்றுக்கணக்கானோர் வந்த வண்ணம் இருப்பர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக ஒன்றினைந்து வருவது வழக்கம். அந்த வகையில் சுற்றுலா மேற்கொள்வதற்காக வாலிபர் ஒருவர் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் சென்றுள்ளார்.

அப்போது சிங்கம் இருந்த இடத்தை நோக்கி சென்றவர் அத்துமீறி அங்கு இருந்த தடுப்பு வலைகளை தாண்டி உள்ளே குதித்திருக்கிறார். உள்ளே குதித்த அந்த வாலிபர் அங்கு இருந்த ஆண் சிங்கத்திடம் சென்று விளையாடி உள்ளார். அந்த வாலிபர் சற்று நேரம் அங்கிருந்த கல் ஒன்றின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பின்பு அவரைப் பார்த்த அந்த ஆண் சிங்கம் அவரை தாக்க முயல்கிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் அனைவரும் பார்த்து அச்சமடைந்துள்ளனர். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகளில் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையின்போது பீகாரை சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் ரெஹன் கான் (வயது 28 )என்றும் , மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது சரணாலயத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*