தண்டவாளத்தில் சிக்கிய கார், மயங்கிய சாரதி, வேகமாக வந்த ரயில்: ஒரு திகில் வீடியோ!

அமெரிக்காவில் ரயில் தண்டவாளத்தில் கார் ஒன்று சிக்கி நிற்பதைக்கண்ட பொலிசார் ஒருவர் சற்றும் யோசிக்காமல் ஓடிச் சென்று அந்த காரிலிருந்தவரை மீட்டுள்ளார்.

Ruben Correa என்ற பொலிசார் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று ரயில் தண்டவாளத்தில் சிக்கி நிற்பதாக அவருக்கு தகவல் வந்துள்ளது.

உடனடியாக அந்த இடத்துக்கு சென்ற Ruben, காரை நோக்கி ஓடிச் சென்று பார்த்தபோது, காரின் சாரதி மயங்கிக் கிடப்பதைக் கண்டிருக்கிறார்.

அந்த காரின் சாரதி மயக்கத்திலிருந்த நிலையில், மணிக்கு சுமார் 80 மைல் வேகத்தில் ரயில் வந்துகொண்டிருக்க, சற்றும் யோசிக்காமல், தனது உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த சாரதியைக் காப்பாற்றியிருக்கிறார் Ruben.

வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், தனது காரை நிறுத்திவிட்டு ஓடும் Ruben, ரயில் தண்டவாளத்தில் சிக்கி நிற்கும் அந்த காரின் கதவைத் திறந்து, காரின் சாரதியை வெளியே இழுக்கவும், அடுத்த நொடி, வேகமாக வந்த ரயில் கார் மீது மோதுவதைக் காண முடிகிறது.

ரயில் மோதியதில் அந்த கார் 30 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாம். Rubenம் அந்த காரின் சாரதியும், தாங்கள் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்தான் என்கிறார்கள் திகிலுடன்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*