தென்னாப்பிரிக்க அணியை தரமான சம்பவம் செய்த இந்திய அணி! டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தல்!

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது . டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 254 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது.

இதனால் மீண்டும் தென்ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது . தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால் இந்திய அணி , தென் ஆப்பிரிக்கா அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றுள்ளது. இதனால் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*