மாஸ் காட்டிய மயங்க் அகர்வால்! முதல் நாளில் இந்திய அணி அபார ஆட்டம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். புஜாரா 58 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் மற்றும் ரஹானே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது . கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் , ரகானே 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*