மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் இந்த பிரெச்சனையெல்லாம் சரியாகிடும்!

அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன. இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் எனப்படும் வலுக்குறைந்த எலும்புகள் குறைபாட்டை போக்குவதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கு சிறந்த நிவாரணமாக இந்த மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. மூட்டுவலி, கீழ்வாதம் பிரச்சினை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை படி மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.

மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இதை சாப்பிடுபவர்களுக்கு குறுகிய காலத்திலேயே உடலில் வீக்கங்கள் எங்கிருந்தாலும் அவை குறைகிறது.

இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் இருக்கின்ற ப்ரீ ராடிக்கல்ஸ் மூலக்கூறுகளை கட்டுப்படுத்தி, வீக்கங்களில் நோய் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த உணவுப் பொருளாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. மேலும் கண் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கண் அழுத்த நோய் ஏற்பட்டு பார்வை மங்குதல் குறைபாட்டையும் சரிசெய்கிறது.

மீன் எண்ணெய் இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து மாரடைப்பு, இதயத் துடிப்பு குறைதல் போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.

மீன் எண்ணெய் மாத்திரைகளில் வைட்டமின் மற்றும் நன்மை தரும் கொழுப்பு சத்துகள், கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*