வனவிலங்கு பூங்காவின் வேலியை தாண்டி குதித்து சிங்கத்திடம் சிக்கிய நபர்: திகிலூட்டும் வீடியோ

இந்தியாவில் நபர் ஒருவர் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தாண்டி உள்ளே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜூவிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மிருகக்காட்சிக்கு சுற்றுலா வந்த நபர்களில் ஒருவர் திடீரென சிங்கம் இருக்கும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிலை தாண்டி உள்ளே குதித்துள்ளார்.

பின்னர், ஆண் சிங்கத்திற்கு அருகே சென்று விளையாடியுள்ளார். இதை சம்பவயிடத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதில், நபர் சிங்கத்தின் அருகே அமர்ந்திருக்க, சிங்கம் அவரை தாக்க முயல்கிறது. சம்பவம் குறித்து பொலிஸ் துணை ஆணையர் கூறியதாவது, வேலியை தாண்டி குதித்த நபர் பீகாரைச் சேர்ந்த 28 வயதான rehan khan என தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட அவர் சிங்கத்திற்கு அருகே சென்றுள்ளார்.

எனினும், உடனே சிறிய காயமின்றி rehan khan மீட்கப்பட்டதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*