விமானங்களில் பயணிகளுக்கு தெரியாமல் அமைந்திருக்கும் ரகசிய அறை: எதற்காக தெரியுமா?

நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் விமானங்களில் ரகசியமாக அறை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த அறையின் பயன்பாடு மற்றும் யார் யார் பயன்படுத்துவார்கள் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட தூர விமான பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் பொதுவாக புத்தகங்கள் வாசித்தும், விருப்பமான திரைப்படங்கள் பார்த்தும் அல்லது தூங்கி ஓய்வெடுத்தபடியும் செல்வார்கள்.

அதேவேளை விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கும் கண்டிப்பாக ஓய்வு தேவை. மட்டுமின்றி நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களின் ஊழியர்களால் ஓய்வு இன்றி பணியாற்றவே முடியாது.

ஆனால், விமானப் பணிப்பெண்கள் ஓய்வெடுப்பதை பயணிகளால் ஒருபோதும் பார்த்திருக்கவே முடியாது.

சுமார் 14 முதல்18 மணி நேரம் இடைவிடாமல் பயணம் செய்யும் நீண்ட தூர விமானங்களில் செல்லும் போது, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களின் சீருடை கொஞ்சம் கூட கசங்காமல் இருக்கும்.

அதனால் அவர்கள் ஓய்வில்லாமல் பணியாற்றுகிறார்கள் என்று பொருளல்ல. அவர்களுக்காக சிறப்பு படுக்கை அறை ஒன்று நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் விமானங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரகசிய படுக்கை அறையானது விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு என தனிப்பட்ட முறையில் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் விமானங்களின் பணிப்பெண்கள் சற்று நெருக்கடியான இடத்தில்தான் ஓய்வு எடுப்பார்கள் என கூறப்படுகிறது. எனினும் விமானிகளுக்கு என தனியாக ஸ்லீப்பிங் கம்பார்ட்மெண்ட் இருக்கும்.

நீண்ட தூர பயணங்களில் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை விமானிகள் இங்குதான் செலவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானிகள் ஓய்வு எடுக்கும் அறையானது முதல் வகுப்பிற்கு மேலே காக்பிட்டிற்கு பின்னால் அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான விமானங்களில் விமானிகள் ஓய்வு அறை இங்குதான் அமைந்துள்ளது. படிக்கட்டு அல்லது ஏணியில் ஏறுவதன் மூலமாக விமானிகளால் இந்த ஓய்வு அறைக்கு செல்ல முடியும்.

இந்த கம்பார்ட்மெண்ட் இரண்டு பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள் மற்றும் பிளாட் பெட்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த அறையில் தொலைபேசி ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும். ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் விமானியின் உதவி அவசரமாக தேவைப்பட்டால் இதன் மூலமாக அழைப்பார்கள்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நீண்ட தூர பயண விமானங்களில் 8 ஊழியர்கள் வரை ஓய்வெடுத்துக் கொள்ள வசதியாக படுக்கை அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களை பொறுத்து ஓய்வு அறையின் வடிவமைப்பு மாறுபடும் என கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*