வெளிநாட்டில் இருக்கும் நபருக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்… குட்டித் தீவை வென்றார்! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் வெளிநாட்டில் நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது கனடாவில் ஒரு தீவுக்கு சொந்தகாரராக மாறியுள்ளார். போர்ச்சுகீசு குடியுரிமை பெற்ற Brendan Lopez என்ற 27 வயது இளைஞர் தற்போது துபாயில் இருக்கும் தன் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்திய வம்சாவளியான இவர் கனடாவின் Nova Scotia-வில் இருக்கும் 6 ஏக்கர் கொண்ட குட்டி தீவினை வென்றுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், Digital-only lifestyle bank(Liv) இதை Emirates NBD நடத்தி வருகிறது, அதன் படி இந்த நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுகாக Win a Private Island என்ற சிறப்பு போட்டி ஒன்றை நடத்தியுள்ளது.

அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு கனடாவில் சுமார் 6 ஏக்கர் கொண்ட குட்டித் தீவு பரிசாக அளிக்கப்படும், அதிலே Brendan Lopez வென்றுள்ளார். இவருக்கு 100,000 டொலர் பரிசு மற்றும் நிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீவு ஐந்து கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டது எனவும், தற்போது அங்கிருக்கும் மதிப்புப்படி பார்த்தால் சுமார் 50,000 முதல் 100,000 டொலர் வரை போவதாக இணையதள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வெற்றி அவருக்கு எப்படி கிடைத்தது என்றால், வெற்றியாளர் குறிப்பிட்ட ஆப்பான Liv பயனாளராக இருக்க வேண்டும், அதன் பின் குறித்த மூலம் புள்ளிகளை பெற வேண்டும்(பணம் அனுப்புவது போன்ற சிலவற்றிற்கு புள்ளிகள் கொடுக்கப்படும்), இதன் படி முதலில் 100 அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படு, அது 20 அதிர்ஷ்டசாலியாக குறைந்து, இறுதியில் ஒருவருக்கே இந்த பரிசு வழங்கப்படும்.

இது குறித்து Brendan Lopez கூறுகையில், எனக்கு அந்த தீவு எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. வீடு கிடையாது, இதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் Nova Scotia-வுக்கு சென்று பார்க்க திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த மொபைல் ஆப் மூலம் எப்படி இந்த வெற்றிய சாத்தியமானது என்பது குறித்து அவருடைய நண்பர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டு வருவதாக கூறப்படுகிறது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*