
அவுஸ்திரேலியாவில் முழு கங்காருவை பூனை ஒன்று சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Emma Spencer என்ற பெண் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருக்கும் யுனிவர்சிட்டியில் PhD படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அங்கிருக்கும் Simpson பாலைவனத்தில் விலங்குகளின் நடவடிக்கைகளை பார்ப்பதற்காகவும், தன்னுடைய படிப்பிற்காகவும், அங்கு பதிவு செய்யும் வீடியோ கமெரா ஒன்றை வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த கமெராவில் இருக்கும் வீடியோவை பார்த்த போது, அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் குறித்த வீடியோ பதிவில் இறந்து கிடந்த முழு கங்காருவை, பூனை அப்படியே சாப்பிடுகிறது. இது குறித்து Emma Spencer பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அந்த கங்காருவை பூனை மட்டுமே தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தது. இதனால் தீவிர பசியில் இருந்த அந்த பூனை உண்மையில் மகிழ்ச்சியாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இறந்து கிடந்த கங்காருவை பார்த்த போது அது சுமார் 5 அடி உயரம் இருக்கும் என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Leave a Reply