ட்விட்டரில் இந்தியாவை தெறிக்க விட்ட தல அஜித் ரசிகர்கள்…?

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தல 60 என்று பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு துவங்கியநிலையில். அவர் முன் போல கருப்பான ஹேர் ஸ்டைல் கெட்டப்பில் ஓட்டலில் இருந்து வெளிவந்த வீடியோ வைரலாகி இருந்தது உடனே ரசிகர்கள் அனைவரும் அஜித் அடுத்த படத்தில் இந்த தோற்றத்தில் தான் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்த்து.

இந்தநிலையில் நேற்று சென்னையில் தல 60 என்ற படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தையும் H.வினோத் இயக்குகிறார்.அந்தவிழாவில் அப்படத்திற்கு வலிமை என்கிற தலைப்பு வைக்கப்பட்ருந்தது

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் டிவிட்டரில் #Valimai என்கிற ஹேஷ்டேக்கில் அஜித் ரசிகர்கள் பலரும் டிவிட் செய்யா ஆரமித்தனர் கொஞ்ச நேர இடைவெளியில் ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இடத்தை பிடித்தது. படத்தின் தலைப்பு வெளியாகி சில மணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்படத்தின் தலைப்பை ஹேஷ்டேக்கை செய்துள்ளனர். இது பெரும் சாதனையாக மாறியுள்ளது. அதுமட்டும் இன்றி தமிழில் ‘வலிமை’ என்கிற தலைப்பு ஹேஷ்டேக்கும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் டிவிட் செய்துள்ளது. இதனால் #Valimai ட்விட்டரில் இந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.