ரித்திகா எடுத்த அதிரடி முடிவு ! பிராத்தனை செய்யும் ரசிர்கர்கள் !!

2016-ல் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, தன் முதல் படத்தில் அதே வேடம் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு ஓகே சொல்லிவிட்டார்.அப்படத்தில் ரித்திகாவுக்கு பயிற்சியாளராக அவருடன் சாக்லேட் பாய் மாதவன் நடித்திருந்தார்.

எதிர்பார்க்காத நிலையில் இறுதிச்சுற்று படத்திற்க்காக ரித்திகாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.அந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடிக்க கவனம் செலுத்திவந்தார். தமிழ் லாரன்ஸ் , விஜய்சேதுபதி போன்ற ஹீரோக்களுடன் பல படங்கள் நடித்திருந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் பாக்சிங்கிற்கு சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் மீண்டும் ரித்திகா சினிமாவுக்கு வரவேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்

இந்தநிலையில் அவர் ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கவுள்ளது.