டெஸ்ட் சதத்தின் மூலமாக சச்சின்..! சாதனையை சமன் செய்தார் ரஹானே

இந்தியா, தென் ஆப்ரிக்கா கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.இதில் முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் இந்திய, முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ரோஹித் ஷர்மா மற்றும் ரஹானே ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன.

இருவரும் தென் ஆப்ரிக்க பந்து வீச்சை சிதறடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிவந்த ரோஹித் ஷர்மா 150 ரன்களை கடந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ரஹானே, டெஸ்ட் அரங்கில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இரண்டாவது நாள் உணவு இடைவேளைக்கு முன், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில் இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு சேர்த்த ரஹானே 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது ரோஹித் &ரஹானே பாட்னர்ஷிப், இதன் மூலம் மாஸ்டர் சச்சின் சாதனையை ரஹானே சமன் செய்தார். இந்திய அணியில் 4வது விக்கெட்டுக்கு அதிக முறை 200 ரன்களுக்கு மேல் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சினுடன் ரஹானே பகிர்ந்துள்ளார்.

சச்சினின் – 5 முறை
ரஹானே -5 முறை
கங்குலி    -3 முறை
கோல       -3 முறை
லட்சுமண்  – 2 முறை