டெஸ்ட் தொடரில் புதிய உலக சாதனை படைத்த ரோகித் ஷர்மா…!

இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நேற்று துவங்கியது டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத்தொடர்ந்து தொடக்கவீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் (10), புஜாரா (0), கோலி (12) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில்

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த விளையாடிய ரோஹித் ஷர்மா – ரஹானே ஜோடி நிதானமா ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரோஹித் ஷர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ள நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 224 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ரோஹித் சர்மா சதத்தை சிக்ஸர் அடித்து நிறைவு செய்தார் இதன் மூலம் சர்வதேச டெஸ்டில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது நடப்பு தொடரில் அவருடைய 3வது சதம் ஆகும். இதற்கு முன்பாக இந்திய வீரர்களில் சுனில் கவாஸ்கர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் இந்தப் போட்டியின் மூலம் ரோஹித் ஷர்மா 14 சிக்ஸர்கள் அடித்து ஒரு வீரர் டெஸ்ட் தொடரில் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.