அஜித்தின் வலிமை பட பூஜையை வேற லெவலுக்கு கொண்டுபோன ரசிகர்கள் : இதுவே முதல் முறையாகும்

இயக்குனர் H.வினோத்தின் இயக்கத்தில் தல அஜித்தின் 60 வது படம் தற்போது நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்றது .

இப்படம் ஒரு மாதகால இடைவேளைக்கு பிறகு வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்,பெண் விபத்திற்குள்ளாகி இறந்தார். இதனால் பேனர் வைப்பதை தவிர்த்து வந்த அஜித் ரசிகர்கள்.சமீபத்தில் நடந்த வலிமை பட பூஜைக்கா கோவை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளை உணவு விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.இதனால் பட பூஜைக்கே இவ்வளவு என்றால் பட ரிலீஸ்க்கு என்ன மாஸ் பண்ண போறாங்க தெரியலே..