ஒட்டு மொத்த இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த கோவை மடிசார் மாமி !

கோயம்பத்தூர் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் 38. வயது பெண் மணி திருமதி இந்திய பட்டம் வென்று. நம் தமிழ் நம் தேசத்திற்கு பெரும் புகழை தேடித்தந்துள்ளார். மேலும் இவர் கடந்த 15 வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் சோனாலி இதற்க்கு முன் 2015,16-ம் ஆண்டுகளில் கோவையில் நடந்த போட்டியில் திருமதி பட்டத்தை வென்றுள்ளார்,அடுத்து 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற போட்டியிலும் திருமதி தமிழ்நாடு என்ற பட்டத்தையும் வென்றார்.

இதற்கிடையில் மொரீசியஸ் நாட்டில் கடந்த வாரம் 12-ந்தேதி நடைபெற்ற திருமதி அழகி போட்டியில் கலந்து கொண்ட சோனாலி பிரதீப் அதில் வெற்றி பெற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் என்ற பட்டத்தை வென்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடித்தந்துள்ளார். இந்த அழகி போட்டி திருமணமான பெண்களுக்கா மட்டும் நடத்த படும் அழகி போட்டி ஆகும். இந்த அழகி போட்டியில் 41 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் சோனாலி பிரதீப் திருமதி இந்தியா யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

திருமதி இந்திய அழகி போட்டியில் வெற்றிபெற்ற சோனாலி பிரதீப் அடுத்ததாக திருமதி யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார் .