கேப்டன்களிலே புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி !

நடந்து முடிந்த இந்தியா – தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய 3-௦ என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்காவை ‘ஒயிட்வாஷ்’ செய்த முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

கோலி கூறும் போது நான் நம் இந்திய கிரிக்கெட் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்.வெற்றி என்ற நோக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும்போது சாதகமான முடிவுகள் தானாகவே வந்து சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த அணியாக இந்திய அணி திகழ வேண்டும், என்று என் நீண்ட நாள் கனவு அதுமட்டுமன்றி எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் அணிக்கும் கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த மனநிலை தான் கைகொடுக்கிறது. எத்தகைய சூழலிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணமே, எங்களது வெற்றியின் ரகசியம் ஆகும்.

இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வியப்பூட்டும் வகையில் இருந்தது. மற்றும் அவருடன் இணைத்து தொடக்க வீரராக களம் இறங்கி அகர்வால், நாள் பேட்டனிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியில் அவருக்கு மிக பெரிய எதிர்காலம் இருக்கிறது. இத தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவுக்கே இந்த தொடரை வென்ற ஒட்டுமொத்த பெருமையும் சேரும். என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்