என் கடைசி ஆசையை மட்டும் நிறைவேத்திடுங்க படுத்த படுக்கையில் பரவை முனியம்மாவின் உருக்கம்…!!

தமிழ் சினிமாவில் விக்ரமின் தூள் படத்தில் ஜோதிகாவுக்கு பாட்டியாக நடித்து மற்றும் அப்படத்தில் ‘சிங்கம் போலே’ என்ற நாட்டுபுற பாடலின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக நடித்த படம் ஜூலை 12 , 2018 ல் வெளிவந்த சிவாவின் தமிழ் படம் -2 ஆகும் அவர் சினிமாவில் பாடல்கள் எழுதி படக்கூடிய புலமை பெற்றவர்.

முனியம்மா என்ற இயற்பெயர் பெற்ற இவர் நாட்டுப்புற பாடல்களின் மூலமாக பறவை முனியம்மா என்று பெயர்பெற்றார் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்தாலும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், இவருக்கு உடல் குன்றிய மாற்று திறனாளி மகன் ஒருவர் உள்ளார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்க பட்ட நிலையில் போது இவருக்கு மறந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ரூபாய் ஆறு லட்சம் நிதிஉதவி அளித்தார். அத்ததுடன் மாதம் ஆறு ஆயிரம் உதவி தொகையை வழங்கினார். அவரின் முழு மருத்துவ செலவுகளும் தமிழக அரசே ஏற்பாடு செய்தது.

தற்போது மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வரும் பரவை முனியம்மா நான் இறந்த பிறகு எனக்கு கிடைத்து வரும் அரசு உதவி சலுகைகளை என்னுடைய மாற்று திறனாளி மகனுக்கு வழங்கவேண்டும் நான் இறந்த நிலையில் என் மகன் அனாதையாகிடுவார் என்று கூறி தமிழக அரசுக்கு வேண்டுதல் வைத்து உள்ளார்.