பிகில இருந்த என்ன ! திகிலா இருந்த என்ன !! சிறப்பு காட்சி கிடையாது அமைச்சர் ஜெயக்குமார்…

நாளைவெளியாக இருந்த பிகில் படத்தின் பெஷல் ஷோ அதாவது காலையில் சுமார் 5.30 மணிக்கு திரையிடப்படும் அந்த சிறப்பு காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜு திரையிடப்பட்டது என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து இன்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் நம் தமிழ் நாட்டில் பணம் இருந்தால் வேண்டுமானலும் படம் எடுத்து வெளியிடலாம். அதில் பெஷல் ஷோ என்று சொல்லி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது ரசிகர்கள் மற்றும் மக்கள் தான் அதனால் தான் பிகில் போன்ற படத்தின் சிறப்பு காட்சிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். எங்களை பொறுத்தவரையில் எல்லோரும் ஒன்றுதான் இதில் பிகில், படமா இருந்த என்ன திகில் படமா இருந்த என்ன எந்த படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டத்திற்கு முன் சமம் தான் என்று கூறினார்.