மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த வீரருக்கு வயிற்று போக்கு..! பாதியில் பேண்ட்டுடன் ஓடும் சம்பவம்..

ICC T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அப்போட்டியில் பங்குபெற தற்போது தகுதிச்சுற்று போட்டிகள்நடைபெற்று வருகிறது. துபாய் உள்ள அபுதாபியில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் கனடா-நைஜீரியா விளையாடின.

அப்போது முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா ௭ ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நைஜீரிய வீரர் ரன்ஸ்ஈவ் திடீரென பெவிலியனுக்கு அதாவது டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அவருக்கு பதிலாக மற்றோர் வீரரை நைஜீரிய அணி களமிறக்கியது.

அதன்பின்னர் ரன்ஸ்ஈவ் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து தனது பேண்ட்டை அட்ஜஸ்ட் செய்துகொண்டு மீண்டும் களத்துக்கு வந்தார். தொடர்ந்து நடுவர் அவரை மீண்டும் களமிறங்க சொல்ல, ரன்ஸ் விட்ட இடத்திலிருந்து தனது ஆட்டத்தை விளையாடினார். அவர் தீடிர் என்று மைதானத்தை விட்டு பாத்ரூமுக்கு ஏன் சென்றார். என்று பார்த்தல் பேட்டிங் செய்யும் போது தீடிர் என்று வயிற் கலக்கல் ஏற்பட்டுள்ளது அதன் காரணமாகவே கழிப்பறைக்கு சென்றுள்ளார். இந்த தகவல் பரவியதால் மைதானத்தில் இருந்த அனைவரும் சிரித்து கொண்டனர்