குழந்தை பெற்ற பெண்கள் இந்த வகை உணவுகளை தவிர்க்கவும்..! இல்லை என்றால் ஏற்படும் பாதிப்பு..?

மனிதன் உயிர் வாழ முக்கியமான காரணி என்றால் அது உணவு தான் நாம் உணவு எப்படி உட்கொள்கிறோமோ அதன் அடிப்படியில் தான் உடலமைப்பு இருக்கும் அதிலும் பெண்கள் கற்பினிக்காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு என்பது மிக முக்கியமானது ஒன்றாகும்.

அதன் பின்னர் குழந்தை பெற்றகாலத்தில் தான் மிகவும் எச்சரிக்கையாக உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு வெங்காயம் மற்றும் இளநீர் போன்றவையே சாப்பிட்டால்
உடனடியே அந்த பாதிப்பு குழந்தைக்கு போய் சேர்ந்து விடும் .

குழந்தை பெற்ற பின் பெண்கள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

குறிப்பாக டீ.காபி போன்றவற்றை உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் அதில் காபின் என்னும் வேதிப்பொருள் உள்ளது அது தாய்ப்பாலில் சேரும். இது உங்கள் குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் வெளியேற்றவும் முடியாததால், குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இது ஓய்வில்லாமை, எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும். காபியின் அளவை குறைத்திடுங்கள், முடிந்தவரை காபியை தவிர்த்திடுங்கள்.

சிக்கன் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் தனை சாப்பிடும் போது செரிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் உங்களுக்கும் குழந்தைக்கும் வாயு தொல்லையை ஏற்படுத்தி விடும்.

அதேபோல் செர்ரி பழங்கல் இயற்கையாகவே மெழுகு பொருள் இருக்கும். அதனை சாப்பிடும் போது மலச்சிக்கலுடன் கூடிய வாயு தொல்லையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.

வேர்க்கடலை சில குழந்தைகளுக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும்.

இயற்கையாகவே தாய்ப்பாலை அதிகரிக்க மூலிகைகளும், கீரைகளும் உதவும் என்றாலும், மிளகுக்கீரையும் வோக்கோசுவும் (ஒரு வகை கொத்தமல்லி) அதில் சேராத ஒன்று. அவை தாய்ப்பால் சுரப்பை குறைகின்றன. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனை நாம் கடைபிடித்தாலே போதும் நம் குழந்தயை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.