இவங்க இருந்திருந்தா நேற்றே சிறுவன் சுர்ஜித்தை மீட் எடுத்திருக்கலாம்..! பிக்பாஸ் மீரா மிதுன் வேதனை பேச்சு…??

தற்போது சர்ச்சை நாயகியாக உருவெடுத்துள்ளவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன். சமீபத்தில் வெளியிடும் கருத்துக்கள் அது சர்ச்சையாக மாறிவருகிறது ஆனால் தன் மனதிலிருந்து விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். இதில் சில சர்ச்சைகளாகவே பார்க்கப்படுகின்றன.

தற்போது தமிழகத்தையே உலுக்கிய திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித் விவகாரம் குறித்து அவர் பேசியுள்ளார்.

மீரா மிதுன் ஒட்டுமொத்த நாடே சிறுவன் சுர்ஜித் வெளியே வரவேணும் என்று ஒவ்வொரு மதத்தவரும் தான் பின்பற்றும் கடவுள்களை பிராத்தனை செய்து வருகிறார்கள். தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகளில் தமிழக முதல்வர் இன்னும் ஏன் நேரடியாக இறங்கவில்லை. அரசு அதிகாரிகள் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் துரிதமாக கடின உழைப்பை கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் தமிழக முதலமைச்சர் இன்னும் என்ன என்ன தேவை என்று கூட தெரியாமல் இருக்கிறார். அண்டை மாநில முதலமைச்சர்களுடன் பேசி மற்ற இயந்திரங்கள் வரவைக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை மறைந்த ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா இந்த வேலை வேற லெவலில் இன்னும் வேகமாக நடைபெற்றிருக்கும் என மீரா மிதுன் கூறியுள்ளார்.