நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு..! பத்தவைத்த மர்ம நபர்கள்..!! போலீஸ் வலைவீச்சி..!!!

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து ECR-சாலையில் உள்ள நீலாங்கரை பகுதியில் இருக்கும் வீடு மற்றும் பனையூர் ஆகிய இடங்களில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளுக்கு விரைந்துச் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இரண்டு வீடுகளிலும் தொடர் சோதனையிட்ட போலீசார் வெடிகுண்டு இல்லாததால் கிடைத்த தகவல் பொய்யான வதந்தி என்று உறுதிப்படுத்தினார். இதையடுத்து போலீசாரின் நேரத்தை வீணாக்கி அலைக்கழிக்கப்பட்ட மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த வெடிகுண்டு தகவல் குறித்து கருத்துக்கள் :

நடிகர் விஜயின் இமேஜ் பேரை கெடுக்க யாரோ முயற்சித்து வருகிறார்கள் அவர்கள்தான் வெடிகுண்டு என்று பொய்த்தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

தற்போது வெளிவந்துருக்கும் விஜயின் பிகில் படத்தின் ப்ரோமோஷனுக்காக வெடிகுண்டு என்று தகவல் பரப்பி இருக்கலாம் என்று சந்தேகப் படுகிறார்கள்.