பழைய ஜோக் தங்கத்துறையின் புது முயற்சி : அனைவரையும் மிரள வைத்த தற்கொலை ஜோக்…?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலமாக திரையில் அறிமுகமானவர் புளியந்த்தோப்பு தங்கதுரை இவர் சேன்டப் காமெடி செய்வதில் மிக முக்கியமானவர் சாதாரணமாக ஊரில் மிமிக்கிரி காமெடி செய்து வந்த தங்கராஜ் இவர் தன் கடின உழைப்பால் மற்றும் தொடர் முயற்சியால் பல தடைகளை தாண்டி தற்போது தன்னை மக்கள் மத்தியில் நிரூபித்துள்ளார்.

காமெடி மன்னன் தங்கராஜ் பழைய காமெடிகளை தொகுத்து வழங்குவதில் கில்லாடி அதை தற்போது உள்ள நடைமுறையில் எடுத்து மக்களிடம் சொல்லி சிரிக்கவைக்கிறார். இதனால் தங்கராஜ் என்ற பெயரோடு பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி ஏற்பட்டது

மேலும் பழைய ஜோக் தங்கதுரை சின்னத்திரையில் பிரபலமனைதை அடுத்து தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த A1, ஜாக்பாட், ஜீவி, மற்றும் அண்ணனுக்கு ஜே , பப்பி ஆகிய படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் தங்கதுரை. தற்போது யோகி பாபுவுடன் பன்னிகுட்டி, பார்ட்னர், டிக்கிலோனா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக கவிதை வாழ்க்கை வரலாறு போன்றவற்றை புத்தகமாக வெளியிடுவது வழக்கம் ஆனால் தற்போது பழைய ஜோக் தங்கதுரை அவர்கள் தனக்கு தெரிந்த ஜோக்குகளை எல்லாம் ஒரு புத்தகமாக எழுதி வெளியிடுகிறார். அப்புத்தகத்திற்கு தற்கொலை ஜோக்குகள் என்று பெயர் வைத்துள்ளார்.