பெண்களின் அந்தரங்க ஓவியங்கள்: சிக்கலில் சிக்கிய ‘தல அஜித்’ மச்சினிச்சி..! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோனா அது தல அஜித் தான் அவர் பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அலட்டிக்காமல் இயல்பாக நடிக்க கூடியவர் தற்போது எல்லாம் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கிவருகிறார். அமர்க்களம் படத்தில் அவருடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணமா செய்துகொண்டார். ஷாலினியின் தங்கையான ஷாமிலி இவர் 1990-களில் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி அஞ்சலி, துர்கா, தைப்பூசம், தேவர் வீட்டுப்பொண்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

அதை தொடர்ந்து சமீபத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வீரசிவாஜி படத்தில் நடித்திருந்தார் மேலும் இவர் மாடலிங், ஓவியம் என்று படு பிஸியாக உள்ளார். பெங்களூருவில் நடைபெற்று வரும் ஓவியக் கண்காட்சியில் ஷாமிலி தான் வரைந்த சில ஓவியங்களை பார்வைக்கு வைத்துள்ளார். அதில் அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களின் படங்களை ஆயில் பெயிண்டிங் மூலம் வரைந்து ஆண்களையே வியக்க வைத்துள்ளார். பலரால் பாராட்டப்பட்டு வருகிறார். சில பேர் ஷாமிலி வரைந்த ஓவியம் பெண்களின் கற்பை களங்கப்படுத்துவது போல் இருக்கிறது கருத்து கூறிவருகிறார்கள்.