தந்தை இல்லாததால் என் அழகான அம்மாவுக்கு துணை வேண்டும்! மகள் கொடுத்த விளம்பரம்…. அனைவரையும் விழிபிதுங்க வைத்த காரியம்

நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவான பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரன் மற்றும் ரேவதி 60 வயதிற்கு மேல் வரும் காதல் அதனை ரேவதியின் மகளாக நடித்திருக்கும் DD-புரிந்து கொண்டு தன் தாய்க்கு கல்யாணம் என்ற கான்செப்ட்டில் அப்படம் அமைந்திருக்கும் அதேபோல் நிஜத்திலும் நடந்துள்ளது ஆஸ்தா வர்மா என்ற இளம் பெண் 50 வயதான தன் தாய்க்கு 50 வயது மதிக்கத்தக்க மணமகன் தேவை என்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

மேலும் அதில் என் அம்மாவுக்கு 50 வயது ஆகிறது அவர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் அதனால் 50 வயது மதிக்கத்தக்க வெஜிட்டேரியன் சாப்பிடும் பழக்கம் கொண்டவராகவும் புகை ,குடிப்பழக்கம் இல்லாதவராகவும் வேண்டும் என்று தன் போன் நம்பரை குறிப்பிட்டு தன் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

இதனை கண்ட இணையதளவாசிகள் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறோம் என்று பாராட்டுக்கள் குவிந்த வருகிறது