தல 60 படத்தில் நஸ்ரியாவா..! அப்போ ஹீரோயின் யார் தெரியுமா இதோ அப்டேட்..?

தல அஜித்தை புதிய பரிமாணத்தில் கட்டிய படம் நேர் கொண்ட பார்வை இப்படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் லோகேஷ் கூட்டணி கூட்டணியில் உருவாக்க இருக்கும் படம் வலிமை இப்படத்தை படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று பட குழுவினர்கள் அறிவித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடி யார் என்று பலரும் யோகித்து வருகிறார்கள் இந்தநிலையில் சமீபத்தில் நடிகை நஸ்ரியா டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் வலிமை என்று ஹாஷ் டேக் போட்டிருந்தார், அதனால் வலிமை படத்தில் ஹீரோயினி இவர் தான் நடிக்க போவதாக செய்தி பரவியது.

ஆனால், நஸ்ரியாவே முற்றிலும் அதை மறுத்து வருகிறார். வலிமை படத்தில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நான் நடிக்க போவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. இன்னும், எதுவுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, தற்போதைய நிலையில், இதுபோல வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் என கூறியிருக்கிறார்.

மேலும், பட குழுவினர்கள் தொடர்ந்து நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்