அம்மாவின் கள்ளக்காதலுக்கு விலை இரண்டு உயிர்பாலி ! மதுரையில் சாலை மறியல் ..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதி கருப்பையா – கீதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் , (7) ஹேமலதா மற்றும் (6) பிரதீபா என்ற மகளும் உள்ளனர். கருப்பையா பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். கீதா வீட்டிற்கு எதிரே ஒரு டீக்கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இதில் கீதாவுக்கு ஆனந்த் என்பவருடன் தகாத உறவு இருந்திருக்கிறது. இதை அறிந்த கருப்பையா மனைவியை கண்டித்தார் . ஆனால் கீதா கேட்கவில்லை.பலமுறை இதனால் இவர்களுக்குல் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததது. அந்த வகையில் திரும்பவும் போன வாரம் சண்டை வந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது . 2 பேரையும் சமாதானம் செய்த போலீசார், கீதாவை மதுரையிலுள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கீதா கருப்பையாவிற்கு தொலைபேசி மூலம் நான் ஆனந்தகுமாரை கல்யாணம் செய்துக்கிட்டேன்.. இனி வீட்டுக்கும் வரமாட்டேன் என்று கூறிவுள்ளார். கீதாவின் இந்த தவறான செயலால் மிகவும் மனஉழைச்சலால் குழந்தைகளும் அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றியுள்ளார். பிறகு கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு வெடிக்க செய்துவிட்டார் கருப்பையா. சிலிண்டர் வெடித்து சிதறியதில் கருப்பையாவும் மூத்த மகள் பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

   

படுகாயங்களுடன் ஹேமலதா மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனிடையே கீதாவையும் ஆனந்தகுமாரையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், கீதா, அவரது தந்தை பெரிய கருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் ஆனந்தை காணவில்லை. தலைமறைவாக உள்ளதால், அவரையும் தேடி வருகிறார்கள்.