மைனா என்கிற நந்தினிக்கு புதிய வழக்கை பயணம் தொடங்கியது ! கணவர் இறந்த பின்பு……

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்து வரும் மைனா என்கிற நந்தினி பல திரை படங்களிலும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் வளர்ந்து வரும் நந்தினி என்கிற நடிகை மைனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில மாதங்களாக மைனாவின் வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

நடிகை மைனா ஏற்கனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மைனாவிற்கு ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது. வருடங்களுக்கு முடிந்து சில மாதங்களிலேயே குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கும் அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது.

இதன் உச்ச கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளியானது. இந்த தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். தற்கொலைக்கு முன்பாக கார்த்திக் எழுதிய கடிதத்தில் நந்தினியின் அப்பாதான் தற்கொலைக்குக் காரணம் என்று எழுதியிருந்தார். இதனால் நந்தினியும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்பொழுது நந்தினிக்கு இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது , அதன் சான்றாக தற்பொழுது நந்தினிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது .