குடிபோதையில் பெற்ற பச்சிளம் பெண் குழந்தையை அடித்து கொன்ற பெற்றோர்கள் ! அதிர்ச்சியில் டாக்டர் ?

சென்னையில் எம்.ஜி.ஆர் நகர்,டாக்டர் அம்பேத்கர் காலனியில் வசிப்பவர் எல்லப்பன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த துர்கா என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் 2.5 மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் எல்லப்பனுக்கு தினமும் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் துர்காவுக்கும் குடிப்பழக்கம் ஏற்பட்டது.

இதனால், கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல இருவருக்கும் தகராறு ஏற்பட, அப்போது பசியில் அழுது கொண்டிருந்த அந்த பச்சிளம் 2.5 மாதமே ஆனா பெண் குழந்தையை எல்லப்பன் கடுமையாக தாக்கியுள்ளார், அதில் குழந்தையின் தலையில் பயங்கரமாக அடிபட்டதை தொடர்ந்து குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்தது. உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக திட்டம் தீட்டி வீட்டிற்கு சென்று குழந்தையின் உடைகளை மாற்றி, மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்து 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் குழந்தையை ஏற்கனவே பரிசோதித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முன்னதாக குழந்தையை பரிசோதித்த மருத்துவரே இம்முறையும் பரிசோதித்துள்ளார். ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததில், மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அப்பகுதி காவல்நிலையத்தில் தகவலை தெரிவித்தார். மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கணவன்-மனைவியிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது எல்லப்பன் தலையில் அடித்து தான் குழந்தை இறந்தது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .